Connect with us

பொழுதுபோக்கு

பாலிவுட் இயக்குனருடன் காதல்? மீண்டும் திருமணம் செய்கிறாரா சமந்தா? மேலாளர் விளக்கம்!

Published

on

Samantha about pushpa song

Loading

பாலிவுட் இயக்குனருடன் காதல்? மீண்டும் திருமணம் செய்கிறாரா சமந்தா? மேலாளர் விளக்கம்!

சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் ராஜ்நிதிமோருவின் தோளில் சாய்ந்தபடி எடுத்த புகைப்படத்தை நடிகை சமந்தா பதிவிட்டிருந்த நிலையில், சமந்தா காதலிப்பதாக தகவல் பரவியது. இது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் சமந்தா, தனது நடிப்பின் மூலம் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களில் இருவரும் மிகவும் நெருக்கமாக காணப்பட்டனர்.குறிப்பாக ஒரு புகைப்படத்தில், சமந்தா விமானத்தில் ராஜ் நிடிமோருவின் தோளில் சாய்ந்து உறங்குவது போல இருந்தது. இந்த புகைப்படங்களை பகிர்ந்த சமந்தா, தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரலலா மூவிங் பிக்சர்ஸ்’ தயாரித்த முதல் படமான ‘சுபம்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த பதிவை வெளியிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.  இந்த புகைப்படங்கள் வைரலாக பரவியதை தொடர்ந்து சமந்தாவும், ராஜ் நிடிமோரும் காதலிப்பதாக சமூகவலைதளங்களில் பரவியது.இது குறித்து சமந்தா ராஜ் நிடிமோரு இருவருமே எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், தற்போது சமந்தாவின் மேலாளர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னணி நடிகை சமந்தா குறித்து வெளியாகும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்று கூறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.விவாகரத்துக்கு பின் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டார். அதே சமயம், திருமணம் செய்துகொள்ளாத சமந்தா, நடிப்பில் கவனம் செலுத்திய நிலையில், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இடையில் உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அவர், அதில் இருந்து மீண்டு மீண்டும தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் இனி திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என கூறி இருந்தார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன