இலங்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(16) இடம்பெற்றது.
முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் என்.கெங்காதரன் தலைமையில், கலாசாலை வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் 2024/2025 ஆவது கல்வி ஆண்டில் தொழில் நிருவாகமாணி மற்றும் வணிகமாணி கற்கைநெறிகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 540 மாணவர்களும், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் நலனோம்புப் பிரிவி சிரேஷ்ட உதவிப்பதிவாளர் உட்படப் பலரும் இவ் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டனர்.