சினிமா
” 4 மாசத்துல எனக்கு கல்யாணம்..! ” வெட்கப்பட்டு பேசிய விஷால்…

” 4 மாசத்துல எனக்கு கல்யாணம்..! ” வெட்கப்பட்டு பேசிய விஷால்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் முன்பு பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கியவர். இன்றும் பல பெண்களின் மனதில் கனவு நாயகனாக வாழ்ந்து வருகின்றார். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே அதிகம் சமீபத்தில் இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த “மதகஜ ராஜா ” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் வந்து பலரால் அனுதாபத்துக்கு உள்ளாகினார். ஒரு சிலர் இவர் போதைக்கு அடிமையாகி இருப்பதாக விமர்சித்தனர். இதனால் பெரிதும் உடைந்தார். அண்மையில் திருநங்கையர்களுக்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மயங்கி விழுந்தார். இந்த நிலையில் சமீபத்தைய பேட்டி ஒன்றில் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிந்ததும் ஆகஸ்ட் 29 தனது பிறந்தநாள் அன்று திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார். மேலும் இருவரும் காதலித்து வருவதாக வெட்கப்பட்டு பேசியுள்ளார்.