சினிமா
” அவருக்கு என் மேல் ஸ்பெஷல் லவ்..” மேடையில் கண்கலங்கிய சிம்பு..

” அவருக்கு என் மேல் ஸ்பெஷல் லவ்..” மேடையில் கண்கலங்கிய சிம்பு..
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் படத்தின் இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பு குழு மற்றும் நடிகர்கள் முழுமையாக பங்கேற்றனர்.விழாவின் முக்கிய ஹைலைடாக சிம்புவின் உரை அமைந்தது. தக் லைப் ட்ரெய்லரை பார்த்தபிறகு மேடையில் பேசிய சிம்பு மிகவும் உணர்ச்சிவசப்படுத்திய வகையில் தனது மனநிலையை வெளிப்படுத்தினார். குறித்த பேச்சில் அவர் “ரொம்ப எமோஷனலா இருக்கு. அவ்ளோ வேலை இந்த படத்துக்காக செய்திருக்கிறேன். இப்ப அதை உங்கள் எல்லாருடன் சேர்ந்து பார்க்கும்போது கண்கள் கலங்குது. மணி சார் என் மீது எப்போதும் ஒரு ஸ்பெஷல் லவ் வைத்திருப்பார். அது வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனா இந்த படத்தில் என் வேலையை நன்றாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என உருக்கமாக கூறியுள்ளார்.மேலும் இந்த படம் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. படத்தில் லப்பர் பந்து நாயகி சஞ்சனா நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.