Connect with us

இலங்கை

இறந்த பின்னும் வாழும் இலங்கை தமிழ் பெண் ; உறவினர்கள் நெகிழ்ச்சி

Published

on

Loading

இறந்த பின்னும் வாழும் இலங்கை தமிழ் பெண் ; உறவினர்கள் நெகிழ்ச்சி

பதுளை வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்த பெண்ணொருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசறை ஹொப்டன் பகுதியை சேர்ந்த எஸ் ரமணி (வயது 48) என்பவரே இவ்வாறு மூளைச்சாவு அடைந்துள்ளார்.

Advertisement

48வயதான பெண்ணொருவர் திடீரென சுகயீனமுற்ற நிலையில் அவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த பெண் மூளைச்சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து அதை வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அதன்பின் அவரது உறவினர்களின் சம்மதத்துடன் அவரது சிறுநீரகம் வெற்றிகரமாக வேறொருவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய உடல் உறுப்புகளும் தேவையுடையவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன