இலங்கை
இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணையும் முன்னாள் MP முஷாரப்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணையும் முன்னாள் MP முஷாரப்
முன்னாள் MP சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஹக்கீம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிக்கட்சி முன்னெடுப்பை கைவிட்டு உரிய தருணத்தில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் உடன் இணைவதற்கான தனது முழுமையான விருப்பத்தை முஷாரப் அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் உப தவிசாளர் பதவியை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உறுப்பினருக்கு வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேச மைய அரசியலைவிட தேர்தல் மைய அரசியல்தான் நமது பிராந்தியத்திற்கு பொறுத்தமானது என்பதையும் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.