Connect with us

வணிகம்

கூட்டு வீட்டுக் கடன்… ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை சேமிக்கலாம்; தம்பதிகள் இத மட்டும் நோட் பண்ணுங்க!

Published

on

Joint home loan

Loading

கூட்டு வீட்டுக் கடன்… ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை சேமிக்கலாம்; தம்பதிகள் இத மட்டும் நோட் பண்ணுங்க!

இளம் தலைமுறையினர் தங்கள் உறவுகளில் நிதி சமத்துவத்தை நாடும் நிலையில், கூட்டு வீட்டுக்கடன்கள் மேம்பட்ட நிதி ஒழுக்கம் மற்றும் சமமான சொத்து உரிமையை வளர்ப்பதற்கான ஒரு வழியாக காணப்படுகிறது. நீண்ட கால முதலீடுகளைத் திட்டமிடும் தம்பதிகளுக்கு இது ஒரு சிறந்த நடவடிக்கையாக அமைகிறது.இந்திய தம்பதிகளிடையே கூட்டு வீட்டுக்கடன்கள் வெறும் பகிரப்பட்ட வீட்டு உரிமையைப் பெறுவதற்கு மட்டுமல்ல, சக்திவாய்ந்த வரி சேமிப்பு கருவியாகவும் பிரபலமடைந்து வருகின்றன. வீட்டு உரிமை என்பது ஒரு கனவை மட்டும் குறிப்பதில்லை; அது செல்வத்தை வளர்த்து பாதுகாப்பை வழங்கும் ஒரு நீடித்த நிதி கடமையாகும். வீட்டில் முதலீடு செய்வது ஒரு பெரிய நிதி முடிவு. ஆனால், தம்பதியினர் ஒரு கூட்டு வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் தங்கள் நிதித் திட்டத்தை மேம்படுத்தலாம்.கூட்டு வீட்டுக்கடன் என்றால் என்ன?பொதுவாக கணவன் – மனைவி இணைந்து எடுக்கும் கூட்டு வீட்டுக்கடன் பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது வருமானங்களை இணைப்பதன் மூலம் கடன் தகுதியை அதிகரிக்கிறது. சுமூகமான நிதிநிலைக்கு பகிரப்பட்ட இ.எம்.ஐ பொறுப்பை அனுமதிக்கிறது. மேலும், இரு கடன் வாங்குபவர்களும் வரி விலக்குகளைக் கோர முடியும் என்பதால் குறிப்பிடத்தக்க வரிச் சலுகைகளை வழங்குகிறது. வரிச் சலுகைகள்இணை விண்ணப்பதாரர்களும் சொத்தின் இணை உரிமையாளர்களாக இருந்து, கடன் திருப்பிச் செலுத்துதலுக்கு பங்களிக்கும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் வட்டி மற்றும் அசல் திருப்பிச் செலுத்துதல் இரண்டிற்கும் வரி விலக்குகளைக் கோர தகுதியுடையவர்கள் ஆகின்றனர். ஒவ்வொரு இணை விண்ணப்பதாரரும் பிரிவு 24(b) இன் கீழ் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டி செலுத்துதலுக்கும், அசல் திருப்பிச் செலுத்துதலுக்கு பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரைக்கும் விலக்கு கோரலாம். இது ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வரை மொத்த வரி விலக்காக இருக்கலாம் வாய்ப்புள்ளது.அசல் திருப்பிச் செலுத்துதலுக்கான விலக்கு (பிரிவு 80C): அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குநரிடமிருந்து பெறப்பட்டிருந்தால், சொத்து சுய பயன்பாட்டிற்காக இருந்தாலும் அல்லது வாடகைக்கு விடப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கடன் வாங்குபவரும் திருப்பிச் செலுத்திய அசலில் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை கோர வாய்ப்பு உள்ளது.வட்டி செலுத்துதலுக்கான விலக்கு (பிரிவு 24B): சுய பயன்பாட்டு சொத்துக்களின் விஷயத்தில், ஒவ்வொரு இணை கடன் வாங்குபவரும் செலுத்திய வட்டியில் ரூ. 2 லட்சம் வரை கோரலாம். வாடகைக்கு விடப்பட்ட சொத்துகளுக்கு, வட்டி விலக்குக்கு வரம்பு இல்லை. ஆனால், மற்ற வருமானத்திற்கு எதிரான ஈடுசெய்தல் ரூ. 2 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது.கூட்டு வீட்டுக்கடன் நன்மைகள்இந்த கூட்டு அமைப்பு கடன் தகுதியையும் அதிகரிக்கிறது. ஏனெனில் வங்கிகள் விண்ணப்பதாரர்களின் ஒருங்கிணைந்த வருமானத்தைக் கருத்தில் கொள்கின்றனர். இது தம்பதியினர் அதிக கடன் தொகையைப் பெற அனுமதிக்கிறது. இது ரியல் எஸ்டேட் விலைகள் அதிகமாக இருக்கும் மெட்ரோ நகரங்களில் பயனுள்ளதாக இருக்கும்.இரட்டை வருமானம் உள்ள குடும்பங்களுக்கு, இந்த நடவடிக்கை இரட்டை நன்மைகளை வழங்குகிறது. இது குறிப்பிடத்தக்க வருடாந்திர வரி சேமிப்பை வழங்குவது மட்டுமல்லாமல், கூட்டாளர்களிடையே நீண்ட கால நிதி ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கிறது. முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் பிரிவு 80EE அல்லது 80EEA இன் கீழ் கூடுதல் சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம். கூட்டு வீட்டுக்கடன்கள் குறித்து கவனிக்க வேண்டியவை:கடனால் நிதியளிக்கப்பட்ட சொத்து கூட்டாக வைத்திருக்கும்போது மட்டுமே கூட்டு வீட்டுக்கடன்கள் அனுமதிக்கப்படுகின்றன.அனைத்து கடன் விண்ணப்பதாரர்களும் நிதியளிக்கப்பட்ட சொத்தின் இணை உரிமையாளர்களாக இருந்தால் மட்டுமே வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் கூட்டு வீட்டுக்கடன்களை அனுமதிக்கின்றன. கடன் வாங்கிய சொத்தில் ஒவ்வொரு கடன் வாங்குபவருக்கும் சட்டப்பூர்வ உரிமை இருப்பதை இது உறுதி செய்கிறது. உதாரணமாக, கணவன் மற்றும் மனைவி இருவரும் விற்பனைப் பத்திரம் அல்லது சொத்து பதிவு ஆவணங்களில் பெயர்கள் இருந்தால் கூட்டுக் கடன் பெறலாம்.கடனை திருப்பிச் செலுத்தும் இ.எம்.ஐ-கள் கூட்டு உரிமையாளர்களால் செலுத்தப்பட வேண்டும்.கூட்டு வீட்டுக்கடனில் உள்ள ஒவ்வொரு இணை விண்ணப்பதாரரும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சமமாக பொறுப்பானவர்களாக கருதப்படுகிறார்கள். இதன் பொருள் சமமான மாதாந்திர தவணைகள் கூட்டு உரிமையாளர்களால் கூட்டாக செலுத்தப்பட வேண்டும். ஒரு நபர் முழு இ.எம்.ஐ-யையும் செலுத்த தேர்வு செய்யலாம் என்றாலும், அனைத்து உரிமையாளர்களும் சமமாக பொறுப்பாளிகள் என்று கடன் வழங்குபவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது தவறும் பட்சத்தில், கடன் வழங்குபவர் தனிப்பட்ட பங்களிப்புகளைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு அல்லது அனைத்து கூட்டு கடன் வாங்குபவர்களிடமிருந்தும் முழு இ.எம்.ஐ-யையும் வசூலிக்க முடியும்.திருப்பிச் செலுத்துதலுக்கான வரிச் சலுகைகளை கூட்டு உரிமையாளர்கள் தனித்தனியாகக் கோர தகுதியுடையவர்கள்.வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒரு கூட்டு வீட்டுக்கடனில் உள்ள ஒவ்வொரு இணை கடன் வாங்குபவரும் கடன் திருப்பிச் செலுத்துதலுக்கான அவர்களின் உண்மையான பங்களிப்பின் அடிப்படையில் தனித்தனியாக வரி விலக்குகளைக் கோரலாம்:கூட்டு உரிமையாளர்களிடையே விகிதாசார உரிமையின் எளிய ஆவணத்தை உருவாக்கலாம்,.மேலும் இ.எம்.ஐ-களை அந்த விகிதத்தில் செலுத்தலாம்.சொத்து உரிமை சமமாக (50:50 என்று வைத்துக்கொள்வோம்) பிரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பரஸ்பர புரிதலைப் பொறுத்து இ.எம்.ஐ பங்களிப்பு வேறுபடலாம். உதாரணமாக, ஒரு இணை கடன் வாங்குபவர் அதிகமாக சம்பாதித்தால், அவர்கள் சொத்தில் சமமான பங்கைக் கொண்டிருந்தாலும், இ.எம்.ஐ-யில் 70% செலுத்தத் தேர்வு செய்யலாம். இரு கடன் வாங்குபவர்களும் தங்கள் பங்களிப்புகளுக்கு ஏற்ப வரிச் சலுகைகளைப் பெற விரும்பினால், இந்த ஏற்பாடு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.கூட்டு உரிமையாளர்களில் ஒருவர் முதல் உரிமையாளராக இருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து இ.எம்.ஐ செலுத்தப்பட வேண்டும்.கண்காணிப்பு, வரி ஆவணங்கள் மற்றும் வங்கி நடைமுறைகளின் எளிமைக்காக, கூட்டு கடன் வாங்குபவர்களில் ஒருவர் முதன்மை உரிமையாளராக இருக்கும் கணக்கிலிருந்து இ.எம்.ஐ-களை செலுத்துவது அறிவுறுத்தப்படுகிறது. இது உண்மையான பங்களிப்பாளரை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்கிறது மற்றும் வரி கோரிக்கைகளை சுமூகமாக செயலாக்க உதவுகிறது. இரு உரிமையாளர்களும் கூட்டுக் வங்கிக் கணக்கை இயக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இ.எம்.ஐ கொடுப்பனவுகள் கடன் விண்ணப்பதாரருடன் தொடர்பை தெளிவாக நிறுவ வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன