சினிமா
சந்தானத்தின் என்ட்ரி மாஸ் காட்டிருச்சு..! ‘DD Next Level’ படம் வசூலில் வேற லெவல்..!

சந்தானத்தின் என்ட்ரி மாஸ் காட்டிருச்சு..! ‘DD Next Level’ படம் வசூலில் வேற லெவல்..!
தமிழ் சினிமாவில் ஹாரர் மற்றும் காமெடி கலந்த படங்கள் கடந்த ஒரு தசாப்தமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது. அதனை மேலும் உயர்த்தும் வகையில் ‘DD Next Level’ என்ற புதிய திரைப்படம், நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஷோ பீப்பிள் நிறுவனம் சார்பில் ஆர்யா தயாரிப்பில் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படம் “DD Returns” படத்தின் அடுத்த கட்டமானதாகக் கருதப்படுகின்றது. ஹாரர் காமெடி என்றாலும், இதில் நவீன பாணியின் வேடிக்கை, மாஸான காட்சிகள் மற்றும் நகைச்சுவை அனைத்தும் கலந்து காணப்படுகின்றன.”ஒரு கேம் ஷோ தோற்றத்திலேயே படம் தொடங்குகிறது. சில பொருள்களை திருடும் குழுவினர் ஒரு வெறிச்சோடிய மாளிகைக்குள் அடைக்கப்பட்டு, அங்கே இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த மாளிகை ஒரு அமானுஷ்ய சக்தியால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதை அவர்கள் பின்னர் அறிகிறார்கள்.” இதுவே இப்படத்தின் கதையாக அமைந்துள்ளது.சந்தானம் மட்டும் இல்லாமல், இந்தப் படத்தில் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, மாறன், மொட்டை ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியானதிலிருந்து, ரசிகர்கள் பெருமளவில் பாசிட்டிவான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் “DD Next Level” என்பது ஒரு பிரமாண்டமான பிக்சர், “சந்தானத்தின் ரீ-என்ட்ரி மாஸ்” எனப் புகழ்ந்து வருகின்றனர்.திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.2.85 கோடி வசூலித்திருப்பதாகப் படக்குழு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் மிக உயர்ந்த வசூல் பெற்ற படமாக கருதப்படுகின்றது.