பொழுதுபோக்கு
‘தக் லைப்’ ஷூட்டிங்கில் அவர் பெயர் இதுதான்: மணிரத்னம் டைம் சீக்ரெட்டை உடைத்த கமல்ஹாசன்!

‘தக் லைப்’ ஷூட்டிங்கில் அவர் பெயர் இதுதான்: மணிரத்னம் டைம் சீக்ரெட்டை உடைத்த கமல்ஹாசன்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கமல்ஹாசன், இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னத்துடன் இணைந்து 1987 ஆம் ஆண்டு ‘நாயகன்’ என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தார். ஐ.எம்.டி.பி தரவரிசையில் கமல்ஹாசனின் மிக உயர்ந்த மதிப்பீடு பெற்ற படங்களில் ஒன்றாக நாயகன் இன்றுவரை நிலைத்திருக்கிறது.ஆங்கிலத்தில் படிக்க: ‘Mani Ratnam reaches set at 5:30 am everyday; crew is forced to leave home at 4:30’: Kamal Haasan recalls director’s exacting natureசமீபத்தில் ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’வுக்கு அளித்த பேட்டியில், கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னத்தின் தனித்துவமான பழக்கவழக்கங்கள் குறித்து பேசினார். அதில் முக்கியமாக, மணிரத்னம் படப்பிடிப்புத் தளத்திற்கு மற்றவர்களை விட முன்னதாகவே வந்துவிடும் பழக்கத்தை அவர் குறிப்பிட்டார்.காலப்போக்கில் மணிரத்னம் மேலும் பக்குவப்பட்டிருக்கிறார் என்று கூறிய கமல்ஹாசன், “மணி காலப்போக்கில் மென்மையடையவில்லை; அவர் மேலும் செழுமை அடைந்துள்ளார். அவர் மென்மையடையக் கூடாது; அது அவரை நீர்த்துப்போகச் செய்யும். ஆனால், தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை எட்டிப்பிடிக்க வசதியாக அவர் தனது வேகத்தைக் குறைத்துள்ளார். தமிழில் நேரத்திற்கு ‘மணி’ என்று பெயர், நாங்கள் அவரை ‘5:30 மணி ரத்னம்’ என்று ஒரு நகைச்சுவையான பெயரிட்டு அழைப்போம். ஏனென்றால் அவர் படப்பிடிப்புக்கு வரும் நேரம் அது. பாவம் ஒளிப்பதிவாளர், அவர் குறைந்தது 5 மணிக்காவது அங்கு இருக்க வேண்டும், அதற்கு அவர் 4:30 மணிக்கு புறப்பட்டாக வேண்டும்,” என்று சிரித்துக்கொண்டே கூறினார். மேலும், மணிரத்னம் அதிகாலையில் படப்பிடிப்புக்கு வருவதை அவர் கிண்டல் செய்தபோது படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியடைந்ததாகவும், இயக்குனர் தான் கிண்டல் செய்யப்படுவதை அறிந்ததும், கமல்ஹாசன் தான் அந்த பழியை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் விவரித்தார்.மணி ரத்னம் எப்போது எழுந்திருப்பார் என்று யாரும் கேட்க மாட்டார்கள், ஏனென்றால் அது எங்களுக்குத் தெரியாது. நான் அவரை அந்தப் பெயரால் அழைக்கப் போகிறேன் என்று அறிவித்தபோது, படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒட்டுமொத்த குழுவும் கைதட்ட ஆரம்பித்தது. அது இறுதியில் அவருக்கும் தெரியவந்தது. அப்போது ஒட்டுமொத்த குழுவும் குற்ற உணர்ச்சியுடன் நின்றிருந்தது. ‘இதெல்லாம் நான் செய்ததுதான்’ என்று அவரிடம் சொன்னேன்,” என்று கமல்ஹாசன் கூறினார்.அதே பேட்டியில், ஒரு இயக்குனராக மணிரத்னத்தின் கண்டிப்பான இயல்பு குறித்தும் கமல்ஹாசன் பல சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார். கொடைக்கானலில் உள்ள உலகின் மூன்றாவது உயரமான அருவிக்கு மணிரத்னம் கூறியதால், தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் சென்ற அனுபவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். “ரவி கே சந்திரன் சார், சாபு சிரில், நான், என் மகள் ஸ்ருதி, மறைந்த சண்டை பயிற்சியாளர் விக்ரம் தர்மா மற்றும் மூன்று உதவி இயக்குனர்கள் கொடைக்கானலில் உள்ள உலகின் மூன்றாவது உயரமான அருவிக்குச் சென்றோம்.காலை 7 மணிக்கு நாங்கள் புறப்பட்டோம். அதன் அடிவாரத்திற்குச் செல்ல விரும்பினோம். அது காடு வழியாக நீண்ட தூர நடைபயணம். சுமார் 30 மைல் தூரத்தில் இருந்து அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்க்க முடியும். முதல் இரண்டு மணி நேரத்தில் உதவி இயக்குனர்கள் விழுந்தார்கள், மயக்கம் அடைந்தார்கள், இரத்தம் வந்தது,” என்று அவர் கூறினார். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் ‘தக் லைஃப்’ என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.