இலங்கை
பெண்கள் தங்கள் மானத்தை காப்பாற்ற இறந்தாலும் பரவாயில்லை ; சர்ச்சையை கிளப்பும் தமிழ் எம்பியின் கருத்து

பெண்கள் தங்கள் மானத்தை காப்பாற்ற இறந்தாலும் பரவாயில்லை ; சர்ச்சையை கிளப்பும் தமிழ் எம்பியின் கருத்து
பெண்கள் தங்கள் மானத்தை காப்பாற்ற இறந்தாலும் பரவாயில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த முகப்புத்தகத்த பதிவில்,
பெண்கள் தங்கள் மானத்தை தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். நிர்வானமாக படம் எடுக்க விட்டுவிட்டு அந்தப் படம் வெளியே வர காரணம் அந்தப் பெண் தான்.
மானம் போன பின் ஐம்பது ஆயிரம் பணம் பெற்றால் போன மானம் திரும்பி வராது. பெண்களும் பெண்ணைப் பெற்ற பெற்றோரும் இதற்கான பொறுப்பை ஏற்பார்களா?
தீதும் நன்றும் பிறர் தர வாரா
தயவுசெய்து பெண்கள் தங்கள் மானத்தை காப்பாற்ற இறந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் மலர வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.