இலங்கை
முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண்

முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண்
கைதி ஒருவருக்கு முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருட்களை கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்கு முறுக்கு பைக்கற்றுடன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முறுக்கு பைக்கற்றுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4,674 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 5,625 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட பெண் பொறள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த மேலதிக நீதவான் நதீரா குமாரி போகஹதெனிய (14) உத்தரவிட்டுள்ளார்.
அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் பொறள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.