சினிமா
ரவி மோகன் விவாகரத்து குறித்து பிரபல யூடியூபர் அதிரடிக் கருத்து..! வைரலான பேட்டி இதோ.!

ரவி மோகன் விவாகரத்து குறித்து பிரபல யூடியூபர் அதிரடிக் கருத்து..! வைரலான பேட்டி இதோ.!
தமிழ் சினிமா உலகில் அடிக்கடி பிஸியாகவுள்ள நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கு தற்போது மீடியா மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு பிரபலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பிரபல யூடியூபராகவும் விமர்சகராகவும் அறியப்படும் சேகுவேரா இது குறித்து தனது கருத்துக்களை சிறப்பாகக் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தி மற்றும் ஆர்த்தியின் தாய் சுஜாத்தா விஜயகுமாரி குறித்து அவர் கூறியதெல்லாம் தற்பொழுது பெரும் சர்ச்சையையும் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.அதன்போது நடுவர், “ ஜெயம் ரவியின் முன்னாள் மாமியார் என்று சொல்வதா அல்லது இன்னாள் மாமியார் என்று சொல்வதா?” எனக் கேட்டிருந்தார். அதற்கு சேகுவேரா, “ஏங்க உங்களுக்கு இது எல்லாம் எதுக்கு? ‘மாமியார்’ என்று சொலிட்டுப் போங்க…” என சிரித்தபடி பதிலளித்தார். இந்த பதில் ரசிகர்களிடையே பல்வேறு வகையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.யூடியூபர் சேகுவேரா, “என்னதான் இருந்தாலும், ஆர்த்தி தான் மனைவி. ரவி தான் கெனிஷா சொல்லுறதைக் கேக்கிறார் என்றால், நீங்கள் வேற ஏன் அந்த கதையைப் பேசுறீங்க?” என்று கேட்டிருந்தார். மேலும், “ஒரு jobற்கு apply பண்ணிட்டாளே நீங்க worker ஆ நினைச்சுக்க முடியாது.” என்று மறைமுகமாக இந்தப் பிரச்சனை குறித்துக் கூறியிருந்தார். அத்துடன் நடுவர், ” இதுக்கு முன்னாடி வரைக்கும் ரவி, ஆர்த்தி இவங்க ரெண்டு பேரும் தான் அறிக்கை வெளியிட்டாங்க ஆனா இப்ப மாமியாரா இருக்கக் கூடிய சுஜாத்தா விஜயகுமாரியிடம் இருந்து தற்பொழுது ஒரு அறிக்கை வந்திருக்கு.” என்று கூறினார். மேலும் அந்த அறிக்கையில், “என் பேரக் குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொறுப்பேற்க வைத்ததாக ரவிமோகன் சொன்னது பொய். அவர் ஆதாரம் தர வேண்டும். அண்மையில் ரவி மோகன் அறிக்கை வெளியிட்ட நிலையில் ரவிமோகனின் மாமியாரும் சினிமா சீரியல் தயாரிப்பாளருமான சுஜாத்தா விஜயகுமாரி இப்படியான அறிக்கை வெளியிட்டுள்ளார்.” என்று நடுவர் கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்த யூடியூபர், “ரவிமோகனின் அறிக்கை மற்றும் இப்பொழுது இவங்க கொடுத்துள்ள அறிக்கை இதெல்லாம் பார்க்கும் போது இந்த விவாகரத்து முடியிறதுக்கு 10 வருஷம் ஆகும்.” என்றார். மேலும், “ஒரு நல்ல மனிதர் குறித்துப் தற்பொழுது ஒரு புயல் போய்க் கொண்டிருக்கு, ரவிமோகன் ஒரு கெட்ட சூழலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.” எனவும் தெரிவித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல், “ஆர்த்தி ரொம்பவே நல்ல பொண்ணு அதுக்குள்ள கெனிஷாவைக் கொண்டு வரவேண்டாம். அத்துடன் ரவி மோகன் தப்பா நடந்திருந்தால் கூட ஒரு வார்த்தை கூட ஆர்த்தி தப்பாவே கதைக்கேல..” என்று கூறினார் அந்த யூடியூபர். மேலும், “ரவி ஏதோ ஒரு பொண்ணு பின்னாடி போனது என்று சொல்லுறது எல்லாம் ரொம்பவே கேவலமா இருக்கு என்றதுடன் உடனுக்குடன் யாருமே எமோஷனல் ஆக வேண்டாம் கொஞ்ச நாள் தீர்ப்பிற்காக காத்திருப்போம்.” என்றார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.