சினிமா
வசூலில் மாபெரும் திருப்பம்..! சூரியின் “மாமன் ” பட முதல் நாள் வசூல்..

வசூலில் மாபெரும் திருப்பம்..! சூரியின் “மாமன் ” பட முதல் நாள் வசூல்..
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள “மாமன் ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா இலட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பாலா சரவணன், பாபா பாசுகர், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தினை Lark Studios நிறுவனம் தயாரித்துள்ளதுடன் புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். தற்போது வரை படம் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் குடும்ப சென்டிமென்ட் ஆக எடுக்கப்பட்ட இந்த படம் முதல் நாளில் 1.21 கோடி வசூலை பெற்றிருக்கிறது.மேலும் படத்திற்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் மூன்று பேர் மண் சோறு சாப்பிட்ட செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சூரியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.