சினிமா
ஸ்ரீலீலாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த பூஜா ஹெக்டே.. அதுவும் எதற்கு தெரியுமா?

ஸ்ரீலீலாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த பூஜா ஹெக்டே.. அதுவும் எதற்கு தெரியுமா?
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் சிரஞ்சீவியின் மகனான இவர் மகதீரா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.தற்போது இவர் புச்சிபாபு இயக்கத்தில் ‘பெத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இப்படத்தில் குத்து பாடலுக்கு நடனமாடும் நடிகை குறித்து அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.அதன்படி, இப்படத்தில் குத்து பாடலுக்கு நடனமாட முதலில் நடிகை ஸ்ரீலீலா தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி அந்த குத்துப்பாடலுக்கு நடனமாட ஸ்ரீலீலாவுக்கு பதிலாக பூஜா ஹெக்டே தேர்வு செய்ப்பட்டதாக கூறப்படுகிறது.