இலங்கை
இலங்கை இராணுவம், ஒருபோதும் மனித உரிமை மீறல்களை முன்னெடுக்கவில்லை ; மகிந்த ராஜபக்ச

இலங்கை இராணுவம், ஒருபோதும் மனித உரிமை மீறல்களை முன்னெடுக்கவில்லை ; மகிந்த ராஜபக்ச
இலங்கை இராணுவம் ஒருபோதும் மனித உரிமை மீறல்களையோ அல்லது போர்க்குற்றங்களையோ முன்னெடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இராணுவத்தினர் தாய் நாட்டின் பெருமை எனவும், அவர்கள் ஒருபோதும் மரணிக்கப் போவதில்லை என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கையர்களும் ஒரு சுதந்திரமான நாட்டை பெறுவதனை உறுதிசெய்வதற்காக விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எனவும், இது தமிழர்களுக்கு எதிரானது அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான இராணுவத்தின் இறுதி தியாகத்தினால் பாதுகாக்கப்பட்ட தாய் நாட்டிற்கு மரியாதை செலுத்துகிறேன்.
எனது காலத்திற்குப் பின்னரும், நாடு ஒரே சிங்கக் கொடியின் கீழ் இறையாண்மையுடன் இருக்க வேண்டும்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எந்தவொரு பகுதியிலும் அச்சமின்றி, பாதுகாப்பாக, சம உரிமைகளுடன் வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதே பல தசாப்தங்களாக ஒரு நாடாக நாம் கூட்டாகக் கண்ட கனவு எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.