சினிமா
தியேட்டரே திருவிழா மாதிரி இருக்கு..! மகிழ்ச்சியில் நடிகர் சூரி..

தியேட்டரே திருவிழா மாதிரி இருக்கு..! மகிழ்ச்சியில் நடிகர் சூரி..
சாதாரண கூலித்தொழிலாளியாக இருந்து படங்களில் காமெடி நடிகராக அறிமுகமாகிய நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகினர். இந்த படத்தினை தொடர்ந்து கருடன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் நேற்று முன் தினம் இவர் ஹீரோவாக நடித்து வெளியாகிய ” மாமன் ” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது.இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் ” தொழில்நுட்பம் எப்படி தான் வளர்ந்தாலும் தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு போதும் குறையாது. படம் வெளியாகிய நாளில் இருந்து நானும் பல தியேட்டர் போயிட்டேன் பாருங்க தியேட்டரே திருவிழா மாதிரி இருக்கு ” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.இதைவிட சூரியின் ” மாமன் ” திரைப்படம் வெளியாகி இரண்டு நாளில் 5 கோடி வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அடுத்து இவர் “படவா “, “ஏழு கடல் ஏழு மலை ” போன்ற படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.