Connect with us

சினிமா

தெலுங்கில் மாஸ் காட்ட ரெடியாகும் நயன்தாரா..! படக்குழு வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்கள்…

Published

on

Loading

தெலுங்கில் மாஸ் காட்ட ரெடியாகும் நயன்தாரா..! படக்குழு வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்கள்…

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி, தனது 157வது திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் செய்தி ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது அந்த எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்தும் வகையில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருப்பது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த புதிய திரைப்படத்தை, இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கவுள்ளார். இவர் F2,  Bhagavanth Kesari போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். இதனால், இந்த கூட்டணி தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என நம்பப்படுகிறது.நயன்தாராவும் சிரஞ்சீவியும் இதற்கு முன் ‘Godfather’  திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்தில் நயன்தாரா நடித்த கதாப்பாத்திரம், வலிமை வாய்ந்ததாக காணப்பட்டது. அத்துடன் இப்படம் தியட்டரில் மிகப்பெரிய வசூல் சாதனையையும் பெற்றிருந்தது.இந்த படம், சிரஞ்சீவியின் நடிப்புக்குச் சிறந்த கட்டமைப்பாகவும், நயன்தாராவுக்கு மீண்டும் தெலுங்கில் ஹிட் கொடுக்கும் தருணமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இயக்குநர் அனில் ரவிபுடி, இந்த இருவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் திரைக்கதையை கொண்டு வருவார் எனவும்  எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன