Connect with us

இந்தியா

உயர்கல்வி படிக்க 10% இட ஒதுக்கீடு: புதுச்சேரி அரசு புதிய அரசாணை வெளியிட அ.தி.மு.க கோரிக்கை

Published

on

பாண்டி அதிமுக

Loading

உயர்கல்வி படிக்க 10% இட ஒதுக்கீடு: புதுச்சேரி அரசு புதிய அரசாணை வெளியிட அ.தி.மு.க கோரிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் ,  உயர் கல்வியிலும் எட்டாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்ற அனைவரும் உயர் கல்வியில் படிக்க10 சதவீதம் இட ஒதுக்கீடு  திட்டத்தில் பயன் பெறலாம் என புதிய அரசாணை அரசு வெளியிட வேண்டும் என அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,” மருத்துவம் சார்ந்த உயர் கல்வியில் அரசின் இட ஒதுக்கிட்டில் பத்து சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு அரசின் இட ஒதுக்கீட்டில் 34 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பு இருந்தும் 14 மாணவர்கள் மட்டும் சேர்க்கப்பட்டனர்.  அதற்கு அரசின் தேவையற்ற நிபந்தனைகள் காரணமாகும்.தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடியார் மருத்துவம் சார்ந்த உயர் கல்வியில் அரசின் இட ஒத்துக்கிட்டில் 7.5% இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கும் உன்னதமான சட்டத்தை கொண்டு வந்தார்.அதன்படி ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். புதுச்சேரியிலும் அதிமுக கோரிக்கை ஏற்று முதல்வர் ரங்கசாமி பத்து சதவீதம் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.ஆனால் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் இதில் பயன் பெற முடியும் என்ற நிபந்தனை விதித்ததால் பெரும்பான்மை அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறவில்லை. தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அனைத்து படிப்பிலும் பத்து சதவீதம் இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை அதிமுக மனதார வரவேற்கிறது. அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள நிபந்தனையை தளர்த்தினால்தான் அறிவிப்பின் பயன் ஏழை மாணவர்களை சென்றடையும்.புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வியிலும் எட்டாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்ற அனைவரும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என புதிய அரசாணை அரசு வெளியிட வேண்டும்.அப்போது தான் அரசின் பத்து சதவீதம் இடங்கள் முழுமையாக பூர்த்தியடையும். எனவே  முதல்வர், கல்வியமைச்சர் ஆகிய இருவரும் இதில் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன