உலகம்
கால்வாயைக் கடக்க முயன்ற படகு மூழ்கியதில் ஒருவர் சாவு; 61பேர் காயம்!

கால்வாயைக் கடக்க முயன்ற படகு மூழ்கியதில் ஒருவர் சாவு; 61பேர் காயம்!
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று பிரான்ஸ் நகரான பவுலோன்-சுர்-மெர் அருகே ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படகில் அதிக சுமை ஏற்றப்பட்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் 61 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிர் பிழைத்தவர்களில் ஒரு குழந்தையும் அவரது தாயும் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்அவர்கள் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஏனையவர்கள் பவுலோன்-சுர்-மெருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அண்மைய புள்ளிவிவரங்கள், கால்வாயைக் கடப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அது ஏப்ரல் மாத இறுதியில் 10,000 ஐ விஞ்சியதாகவும் கூறுகின்றது.