பொழுதுபோக்கு
குறுகிய காலத்தில் முன்னணி நடிகை; இலங்கை பயணம் ‘அசின்’ திரை வாழ்க்கையை பாதித்தது எப்படி?

குறுகிய காலத்தில் முன்னணி நடிகை; இலங்கை பயணம் ‘அசின்’ திரை வாழ்க்கையை பாதித்தது எப்படி?
2000-ம் ஆண்டுகளில் தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். தனது வசீகரமான தோற்றத்தாலும், திறமையான நடிப்பாலும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்ற இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதித்தார்.ஆங்கிலத்தில் படிக்க: How a trip to Sri Lanka sparked backlash against Asin Thottumkal and impacted her Tamil film career: ‘Involved merely in the capacity of an artiste’கமல்ஹாசன், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், விஜய், பிரபாஸ், அஜித் குமார், சூர்யா, விக்ரம், பவன் கல்யாண் போன்ற தென்னிந்திய நட்சத்திரங்கள் முதல் ஆமீர் கான், சல்மான் கான், அக்ஷய் குமார், மிதுன் சக்ரவர்த்தி, அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் வரை பல பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்தது இவர் நடித்தால் படம் வெற்றி என்ற பெயரை பெற்றிருந்தர். இருப்பினும், அவரது திரையுலக வாழ்க்கையின் உச்சத்தில் ஒரு எதிர்பாராத சர்ச்சை அவரைச் சூழ்ந்தது.இது அவரது தென்னிந்திய சினிமா வாய்ப்புகளை குறிப்பாக தமிழ் சினிமாவில் இவருக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைத்ததாகப் பலரும் நம்புகின்றனர். 2009-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கம், இலங்கையில் தமிழர்கள் நீண்டகாலமாக துன்புறுத்தப்படுவதைக் காரணம் காட்டி, எந்தவொரு இந்திய பிரபலமும் இலங்கையில் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ அல்லது திரைப்பட படப்பிடிப்புகளில் ஈடுபடவோ கூடாது என்று வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்படுகிறது.அதே சமயம், அசின், தனது ‘ரெடி’ (2011) திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக 2010-ம் ஆண்டு மத்தியில் சல்மான் கான் மற்றும் பிறருடன் இலங்கை சென்றார். மேலும், சல்மான் கானின் ‘பீயிங் ஹியூமன்’ அறக்கட்டளையின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் மூன்று நாள் கண் மருத்துவ முகாம்களையும் அவர் ஏற்பாடு செய்ததாகத் தகவல்கள் வெளியானது. இது தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் கோபத்திற்கு ஆளானதாகத் தெரிகிறது.இதன் விளைவாக, அவருக்குத் தென்னிந்திய சினிமாவில் ஒரு அறிவிப்பில்லாத தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொழும்பில் நடைபெற்ற ஐஐஎஃப்ஏ விருது விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சங்கம் எச்சரிக்கை விடுத்த பின்னரும் அசின் இலங்கைக்குச் சென்றிருந்தார். அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் போன்ற நட்சத்திரங்கள் கூட அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், சல்மான் கான், விவேக் ஓபராய், சைப் அலி கான், ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் லாரா தத்தா ஆகியோர் கலந்து கொண்டதால், அவர்கள் சங்கத்தால் தடை செய்யப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.இலங்கையில் ‘ரெடி’ படப்பிடிப்பில் பங்கேற்றது குறித்து கேட்டபோது, “நான் ஒரு கலைஞராக மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற விஷயங்களில் திரைப்பட தயாரிப்பாளர்களின் முடிவுக்கு நான் கட்டுப்பட வேண்டும்” என்று அசின் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதன்பிறகு, 2010-ம் ஆண்டு அக்டோபரில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சித்திக் இயக்கத்தில், விஜய் நடித்த ‘காவலன்’ (2011) படப்பிடிப்பிற்காக அசின் சென்றிருந்தபோது, ஒரு அரசியல் கட்சியினர் கருப்புக் கொடிகளுடன் போராட்டம் நடத்தினர்.இலங்கைக்கு அவர் சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள், அசின் “தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை” எடுத்ததாகவும், “தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசியல்வாதிகளுடன் நட்பாக இருந்தார்” என்றும் குற்றம் சாட்டினர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது. இந்த சர்ச்சை நேரடியாக அவரது தமிழ் சினிமா வாய்ப்புகளைக் குறைத்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், ‘காவலன்’ தான் அசின் நடித்த கடைசி தமிழ் திரைப்படம். அதற்குள் அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.இருப்பினும், அவரது முதல் பாலிவுட் படமான ‘கஜினி’ (2008) மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற போதிலும், அங்கு அவரது சினிமா வாழ்க்கை முழுமையாக உயரவில்லை. 2012-ம் ஆண்டு ‘கில்லாடி 786’ படத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் திரையுலகிலிருந்து விலகியிருந்த அவர், 2015-ம் ஆண்டு அபிஷேக் பச்சன் மற்றும் ரிஷி கபூர் நடித்த ‘ஆல் இஸ் வெல்’ படத்தின் மூலம் மீண்டும் வந்தார். அதுதான் அவர் திரையில் தோன்றிய கடைசி திரைப்படம். 2016-ம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் சினிமாவுக்கு முழுமையாக விலகிவிட்டார்.