விளையாட்டு
கோவையில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி: மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

கோவையில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி: மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
கோவை அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. யோவா யோகா அகாடமி உட்பட பல்வேறு விளையாட்டு அமைப்பினர் இணைந்த ஓபன் பிரிவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில், யோகா, சிலம்பம், கராத்தே, டென்னிஸ் உட்பட பத்து விதமான போட்டிகள் நடைபெற்றது.கேரளா,கர்நாடகா,பீகார்,மத்தியபிரதேசம்,மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டிகளை பிரபல யூ டியூபர் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,யோகாவை உலகமெங்கும் கொண்டு சென்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.மேலும் பிசியோதெரபி மருத்துவப் படிப்பில் யோகாவை ஒரு பாடத்திட்டமாக அவர் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. யோகாசனம் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் அனைவரும் வாழ்வில் சிறந்து விளங்க முடியும். நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்தது புதிய அனுபவத்தை கொடுத்தது என்றும் கூறியள்ளார்.பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.