இலங்கை
சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற தவறிய மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற தவறிய மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்காக 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது, சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி அல்லது தோல்வி என்பவை பரிசீலிக்கப்படாது என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 2025ஆம் ஆண்டிற்காக உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவின் கீழ் பாடசாலைகளில் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
https://moe.gov.lk/2025/05/37984/ என்ற இணைய முகவரிக்கு பிரவேசித்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.