இலங்கை
மீண்டும் இலங்கை வரும் நடிகர் சிவகார்த்திகேயன்

மீண்டும் இலங்கை வரும் நடிகர் சிவகார்த்திகேயன்
தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிவகார்த்திகேயனின் 23ஆவது திரைப்படமான ‘மதராஸி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக பராசக்தி திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழு இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.