சினிமா
மேடையில் காதலை உறுதி செய்த விஷால் – தன்ஷிகா..! கல்யாண தேதி அறிவிப்பு..

மேடையில் காதலை உறுதி செய்த விஷால் – தன்ஷிகா..! கல்யாண தேதி அறிவிப்பு..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் முன்பு பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கியவர். இன்றும் பல பெண்களின் மனதில் கனவு நாயகனாக வாழ்ந்து வருகின்றார். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே அதிகம் சமீபத்தில் இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த “மதகஜ ராஜா ” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் வந்து பலரால் அனுதாபத்துக்கு உள்ளாகினார். ஒரு சிலர் இவர் போதைக்கு அடிமையாகி இருப்பதாக விமர்சித்தனர். இதனால் பெரிதும் உடைந்தார். அண்மையில் திருநங்கையர்களுக்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மயங்கி விழுந்தார். மேலும் நடிகை தன்ஷிகா பேசும்போது விஷால் உடன் தனது திருமணம் வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்தார். விஷால் பிறந்தநாள் அது என்பதால் தான் நாங்கள் அந்த தேதியை தேர்வு செய்து இருப்பதாக கூறி இருக்கின்றனர்.