வணிகம்
ரிட்டையர்மென்ட் குறித்த கவலை வேண்டாம்; இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் போதும்: 8.2% வட்டி தரும் சூப்பர் ஸ்கீம்

ரிட்டையர்மென்ட் குறித்த கவலை வேண்டாம்; இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் போதும்: 8.2% வட்டி தரும் சூப்பர் ஸ்கீம்
பணியில் இருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் எதிர்காலத்தை நினைத்து கவலை ஏற்படும். இனி, அத்தியாசிய நிதி தேவைகளுக்கு என்ன செய்வது என்ற சிந்தனை பலருக்கும் இருக்கும்.அதன்படி மூத்த குடிமக்கள் இவ்வாறு கவலை கொள்ள வேண்டாம் என்ற அடிப்படையில் மத்திய அரசு சார்பில் ஒரு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதனை மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்) என்று அழைக்கின்றனர்.இந்த மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்தால் போதும். ஏறத்தாழ வைப்பு நிதி திட்டம் போன்று இது செயல்படும். அந்த வகையில், குறைந்தபட்சம் ரூ. 1000-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ள முடியும்.இவ்வாறு செய்தால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதற்கான வட்டி நம்முடைய சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும்.இதற்கான முதிர்வு காலம் நிறைவடைந்ததும் வட்டியுடன் சேர்த்து நம்முடைய முதலீட்டு தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பவர்கள் இத்திட்டத்தை பரிசீலிக்கலாம். அரசு சார்பில் இதனை வழங்குவதால் நிதி அபாயங்கள் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.