Connect with us

சினிமா

விஜயகாந்தின் நினைவால் நடிகர் புகழ் செய்த சாதனை.! என்ன தெரியுமா?

Published

on

Loading

விஜயகாந்தின் நினைவால் நடிகர் புகழ் செய்த சாதனை.! என்ன தெரியுமா?

தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தமிழக மக்கள் மனதிலும் தனது தனிப்பட்ட செயல்களால் அன்பையும் மரியாதையையும் பெற்று வாழ்ந்தவர் ‘கேப்டன்’ விஜயகாந்த். அவரது மறைவு திரையுலகம் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.இந்நிலையில், நடிகர் புகழ் தனது வாழ்வின் முக்கிய கட்டத்தை இந்த மறைந்த நடிகருக்காக அர்ப்பணித்து வந்திருப்பது தற்போது அனைவரின் பாராட்டுகளையும் பெருமையையும் பெற்றுள்ளது. விஜயகாந்த் இறந்ததற்குப் பிறகு, நடிகர் புகழ் தனது சென்னை அலுவலகத்தில் தினமும் அன்னதானம் வழங்கத் தொடங்கினார். அது தற்பொழுது 500வது நாளை எட்டியுள்ளது.இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த புகழ், “விஜயகாந்த் ஐயா எப்பொழுதும் மக்கள் நலனுக்காக சிந்தித்து செயல்படுபவர். அவரை முன் உதாரணமாக வைத்து நானும் என் சார்பில் ஒரு நற்பணியைத் தொடர விரும்புகிறேன். எனவே, என் அலுவலகத்தில் தினமும் இலவசமாக உணவளிக்க முடிவு செய்துள்ளேன்.” என்று கூறியிருந்தார்.இன்று, புகழ் தனது அன்னதான பணியின் 500வது நாளை நிறைவேற்றியதை நினைவுபடுத்தும் வகையில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் சமாதிக்கு நேரில் சென்று மலர்வளையம் அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.நடிகர் புகழ், தனது கதாப்பாத்திரங்கள் மூலம் மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தவர். ஆனால், அவருடைய வாழ்க்கையின் இந்தப் பகுதி யாராலும் எதிர்பார்க்காத விடயமாகவே காணப்படுகிறது. சமூக நலனுக்காகக் களத்தில் இறங்கிய இந்த புது மனிதரை ரசிகர்கள் மிகவும் உயர்வாகப் பார்க்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன