Connect with us

பொழுதுபோக்கு

10 வயதில் சினிமா அறிமுகம்; எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை பல சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர்: தீ விபத்தில் மரணம்!

Published

on

Actress Sukumari

Loading

10 வயதில் சினிமா அறிமுகம்; எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை பல சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர்: தீ விபத்தில் மரணம்!

தனது 10 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 2500 படங்களுக்கு மேல் நடித்து, 9 மொழிகளில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்திய ஒரு நடிகை தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தார். அவர் தான் நடிகை சுகுமாரி.தனது பெற்றோர்கள் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், தமிழகத்தில் நாகர்கோவில் பகுதியில் 1940-ம் ஆண்டு பிறந்தவர் தான் சுகுமாரி. 7 வயதில் நடனம் கற்றுக்கொண்ட இவர், இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்க, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதி 1951-ம் ஆண்டு வெளியான ஓர் இரவு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுகுமாரி, எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் தொடங்கி, தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வரும் விஜய் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம், பெங்காலி, ப்ரெஞ்ச் உள்ளிட்ட 9 மொழிகளில் 2500-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுகுமாரி, தென்னிந்திய சினிமாவில் மோகன்லால், கமல்ஹாசன், மகேஷ்பாபு உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.காமெடி, வில்லி, குணச்சித்திரம் என அனைத்து கேரக்டர்களிலும் நடிப்பில் அசத்தியுள்ள நடிகை சுகுமாரி, 2003-ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றிருந்தார். நம்ம கிராமம் படத்திற்காக, 2010-ம் ஆண்டு, தேசிய விருதையும் வென்றுள்ளார்.கேரளா அரசின் மாநில விருதை 4 முறை வென்றுள்ள நடிகை சுகுமாரி, 1959-ம் ஆண்டு இயக்குனர் பீம்சிங்கை திருமணம் செய்துகொண்டார். 1978-ம் ஆண்டு பீம் சிங் இறந்த நிலையில், 38 வயதில் சுகுமாரி தனது கணவரை இழந்தார். அதன்பிறகு தனது சுரேஷ் பீம்சிங்கை வளர்த்து ஆளாக்கினார்.ஒரு சில திரைப்படங்களில் நடித்த சுரேஷ் பீம்சிங், தற்போது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தனது முத்திரையை பதித்துள்ள நடிகை சுகுமாரி, நாடக குழுவுடன் இணைந்து 5000-க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 2009-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் அனுஷ்காவின் பாட்டியாக சுகுமாரி நடித்திருந்தார்.வேட்டைக்காரன் படத்தில் அவரின் காமெடி காட்சிகள், அவருக்கும் விஜய்க்குமான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு தனது வீட்டில் விளக்கு ஏற்றும்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த சுகுமாரி, 2013-ம் ஆண்டு மார்ச் 26-ந் தேதி மரணமடைந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன