விளையாட்டு
LSG vs SRH LIVE Score: டாஸ் வென்ற ஐதராபாத் பவுலிங் – லக்னோ முதலில் பேட்டிங்

LSG vs SRH LIVE Score: டாஸ் வென்ற ஐதராபாத் பவுலிங் – லக்னோ முதலில் பேட்டிங்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, LSG vs SRH LIVE Cricket Scoreஇந்நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற ஐதராபாத் பவுலிங் – லக்னோ முதலில் பேட்டிங் இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்: ஐதராபாத்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, ஜீஷன் அன்சாரி, எஷான் மலிங்காஇம்பாக்ட் பிளேயர்: முகமது ஷமி, அதர்வா டைடே, சச்சின் பேபி, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங்லக்னோ: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, அவேஷ் கான், வில் ஓ’ஆர்கேஇம்பாக்ட் பிளேயர்: ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, மணிமாறன் சித்தார்த், ஷர்துல் தாக்கூர், டேவிட் மில்லர்.நேருக்கு நேர் ஐ.பி.எல் தொடரில் லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 5 போட்டிகளில் லக்னோ 4 முறையும், ஐதராபாத் ஒருமுறையும் வென்றுள்ளன. இந்த சீசனில் நடந்த ஆட்டத்தில் லக்னோ 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.