சினிமா
என்னடா பொழப்பு இது..!– சினிமா ரசிகர்களைக் கவர்ந்த வடிவேலுவின் குரல்..! வெளியான வீடியோ..

என்னடா பொழப்பு இது..!– சினிமா ரசிகர்களைக் கவர்ந்த வடிவேலுவின் குரல்..! வெளியான வீடியோ..
தமிழ் சினிமாவில் இன்று பேசப்படும் செய்தியாக நடிகர் வடிவேலு பாடிய புதிய பாடல் காணப்படுகின்றது. அந்தவகையில், ‘மெட்ராஸ் மேட்னி’ என்ற திரைப்படத்திற்காக வடிவேலு பாடிய ‘என்னடா பொழப்பு இது’ எனும் லிரிக்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகப் பரவி வருகின்றது.இந்தப் பாடல் வடிவேலுவின் நகைச்சுவையும், சினிமா ரசிகர்களின் உணர்வையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கின்றது. ‘மெட்ராஸ் மேட்னி’ என்பது ஒரு புதிய தலைமுறையின் கதை. நகர வாழ்க்கையின் குழப்பங்களையும், ஒவ்வொரு நாளும் நம்மை எப்படி இழுத்துச் செல்கின்றது என்பதையும் சொல்லுகின்ற படமாக இது காணப்படுகின்றது. தென் இந்திய சினிமாவின் காமெடி கிங் வடிவேலு, நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது படங்களில் முழுமையாக பயணித்து வருகின்றார். அதிலும் பாடகர் வடிவேலு என்ற புதிய அவதாரம், ரசிகர்களுக்குப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தற்பொழுது வெளியான வீடியோ யூடியூப்பில் அதிகளவான பார்வையாளர்களையும் பெற்றுவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.