இலங்கை
கவனவீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

கவனவீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!
நல்லூரானது சைவ சமயத்தின் புனிதத் தலமாகும். இத்தகைய தலத்துக்கு அருகிலே அசைவ உணவகம் அமைக்கப்படுவது மதச்சாந்தி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரானது என்பதனை வெளிப்படுத்தும் முகமாக நாளையதினம் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே அனைத்து நல்லூர் கந்தன் பக்தர்களும் ஒன்றுகூடி, இந்த அசைவ உணவகத்துக்கு எதிரான திடமான எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டுகிறோம் என ஏற்பாட்டாளர்கள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நாளை செவ்வாய்க்கிழமை (20) மாலை 4.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இந்த போராட்டத்தை நடாத்துவதற்கு சைவ அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.