இலங்கை
நல்லூர் கந்தன் உற்சவ வளாகத்தில் அசைவ உணவகம்; போராட்டத்திற்கு அழைப்பு

நல்லூர் கந்தன் உற்சவ வளாகத்தில் அசைவ உணவகம்; போராட்டத்திற்கு அழைப்பு
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்பாக இன்று (20) மாலை 4.30 மணிக்கு போராட்டம் நடைபெறவுள்ளது.
நல்லூரான் உற்சவ வளாகத்தில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து சைவ சமயிகள் அணிதிரண்டு எதிர்ப்பை பதிவு செய்யுமாறு அகில இலங்கை சைவ மகா சபை வலியுறுத்தியுள்ளது.