இலங்கை
நளிந்தவுக்கு பதிலாக ஹன்சக

நளிந்தவுக்கு பதிலாக ஹன்சக
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிநாடு சென்றுள்ள நிலையில், பதில் அமைச்சராக மருத்துவர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஜெனிவாவில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 78ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ளார்.