இலங்கை
புதிய பாபா வாங்காவின் அதிர்ச்சிதரும் கணிப்பு ; 2025 இல் பேரழிவு தரும் சுனாமி!

புதிய பாபா வாங்காவின் அதிர்ச்சிதரும் கணிப்பு ; 2025 இல் பேரழிவு தரும் சுனாமி!
புதிய பாபா வங்கா என்ற பெயர் ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற ஜப்பானியப் பெண்
2025 இல் பேரழிவு தரும் சுனாமி தாக்கவுள்ளதாக கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானியப் பெண்ணான 70 வயதான இல்லஸ்ட்ரேட்டரான ரியோ டாட்சுகி (ryo tatsuki) , தனது வினோதமான துல்லியமான முன்னறிவிப்புகளால் கவனம் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை புதிய பாபா வங்கா என ஜப்பானிய மக்கள் அழைக்கிறார்களாம்.
அவரது கணிப்புக்கள் தொடர்பில் வெளியான தகவல்களின்படி ,
ஜப்பானிய மங்கா கலைஞர் ஒருவர் ஜூலை 2025 இல் பேரழிவு ஏற்படும் என்று கணித்திருப்பது குறித்த பரவலான கவலை ஜப்பானின் சுற்றுலாத் துறையைப் பாதித்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் இந்த எச்சரிக்கைக்கு எதிர்வினையாற்றுவதால் ஜப்பானுக்கான பயண முன்பதிவுகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ரியோ தட்சுகி (ryo tatsuki) ஜூலை 2025 இல் ஒரு பெரிய அளவிலான பேரழிவு எதிர்பார்க்கப்படும் என்ற கணிப்புடன் எச்சரிக்கையை எழுப்பியுள்ளார்.
ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கு அடியில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவரது கணிப்பில் அடங்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்த கணிப்பு 2011 இல் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு பெரிய சுனாமிகளையும் குறிக்கிறது .
ஜப்பானின் “புதிய பாபா வாங்கா” என்று சிலரால் குறிப்பிடப்படும் தட்சுகி (ryo tatsuki) , மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, 1995 கோப் பூகம்பம் மற்றும் பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் போன்ற நிகழ்வுகளை முன்னதாகவே கணித்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் புதிய பாபா வங்கா (ryo tatsuki) இன் கணிப்பு தற்போது உலகளவில் கவனம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.