இலங்கை
யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்ப பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். தாவடி பகுதியைச் சேர்ந்த சின்னையா ரஜீனா (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணுக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் நோய் குணமடையாத நிலையில் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் கடந்த 2008ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தினால் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.