இலங்கை
யாழில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற துவிச்சக்கர வண்டி திருட்டு முறியடிப்பு

யாழில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற துவிச்சக்கர வண்டி திருட்டு முறியடிப்பு
யாழ்ப்பாணம் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற பல்வேறு துவிச்சக்கர வண்டிகளின் திருட்டினை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் முறியடித்துள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குருநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் பதில் கடமை பொறுப்பதிகாரி விஜய ராஜா மற்றும் குழுவினர் கைது செய்தனர்.
இதன்போது குறித்த நபரிடமிருந்து ஒரு துவிச்சக்கர வண்டியும் அவரின் உடமையில் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
பின்னர் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபரினால் 23 மாதங்களாக நல்லூர், யாழ் நகர பகுதி உள்ளிட்ட இடங்களிலிருந்து திருடப்பட்ட ஆண்கள் பயன்படுத்தும் ஐந்து துவிச்சக்கர வண்டிகளும் பெண்கள் உபயோகிக்கும் 11 துவிச்சக்கர வண்டிகள் அடங்கலாக 16 துவிச்சக்கர வண்டிகளை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி துவிச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் இருப்பின் தகுந்த அடையாளங்களை காண்பித்து துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.