இலங்கை
விஷாலுக்கு விரைவில் டும்டும்டும்… மணபெண் இவர்தான்!

விஷாலுக்கு விரைவில் டும்டும்டும்… மணபெண் இவர்தான்!
நடிகர் விஷால் , நடிகை தன்ஷிகா இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதை உறுத்திப்படுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் முன்பு பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கியவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மதகஜ ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் வந்து பலரால் அனுதாபத்துக்கு உள்ளாகினார்.
அதோடு அண்மையில் திருநங்கையர்களுக்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மயங்கி விழுந்தமையும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் விஷால், தன்ஷிகா திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. கபாலி படத்தில் சூபர் ஸ்டார் ரஜனிக்கு மகளாக தன்ஷிகா நடித்திருந்தார்.
திருமணம் குறித்து நடிகை தன்ஷிகா பேசுகையில், ஆகஸ்ட் 29 ஆம் திகதி விஷால் பிறந்தநாள் அது என்பதால் தான் நாங்கள் அந்த திகதியை தேர்வு செய்து இருப்பதாக கூறி இருக்கின்றனர்.
தன்ஷிகா – விஷால் காதல் விவகாரம்தான் இப்போது , தமிழ் சினிமா உலகில் பேசப்படும் விடயமாக உள்லது.