விளையாட்டு
CSK vs RR LIVE Score: டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு – சென்னை முதலில் பேட்டிங்

CSK vs RR LIVE Score: டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு – சென்னை முதலில் பேட்டிங்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா – பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்டபோது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன. எனவே, இந்த இரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.