இலங்கை
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
யாழ்ப்பாணம் – நல்லூரில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணம் நல்லூர் என்பது இந்துக்களின் புனித பூமியாகும். ஆனால், ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை நோகடிக்கும்படியாக, இங்கு அசைவ உணவகமொன்றைத் திறந்துள்ளனர். மிக இரகசியமான வகையில் இந்தப் ணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொருத்தமில்லாத இடத்தில், பொருத்தலாத சூழலில் இந்த அசைவ உணகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனடியாக அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளோம்.
எமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று யாழ்ப்பாணம் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த உணவகம் அகற்றப்படவேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்களில் பரந்துபட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் – என்றார்.