பொழுதுபோக்கு
அத்தைக்கு கேன்சர்: குடும்பத்தை ஒன்று சேர்த்த ஹீரோ: தாளி கட்டிய உண்மை தெரியவருமா?

அத்தைக்கு கேன்சர்: குடும்பத்தை ஒன்று சேர்த்த ஹீரோ: தாளி கட்டிய உண்மை தெரியவருமா?
கல்லூரியில் ஆசிட் வீச்சு.. மாணவியை காப்பாற்ற களத்தில் கை கோர்த்த கார்த்திக், ரேவதி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தியால் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து பரமேஸ்வரி பாட்டியின் ஆசைப்படி கும்பசோறு சாப்பிட்ட நிலையில் இன்று, எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் கரண்ட் வர இதை பார்த்த சந்திரகலாவிற்கு நம்ம வீட்டில் மட்டும் எப்படி கரண்ட் இல்லாமல் போச்சு என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது மனதுக்கு நிறைவாக இருப்பதாகவும் இதற்கெல்லாம் காரணம் மாப்பிள்ளை ராஜா தான் என்று கார்த்தியை பாராட்டுகின்றனர்.அடுத்து ரூமுக்கு வந்த ரேவதி எனக்கும் இப்படியெல்லாம் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடணும் என்ற ஆசை இருந்தது. அது உங்களால் இப்போ நிறைவேறி விட்டது, நன்றி என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து அடுத்த நாள் மயில்வாகனம் மற்றும் ரோகினி என இருவரும் டாக்டரை சந்தித்து குழந்தை உருவாகவில்லை என்று பரிசோதனை செய்து கொள்ள இருவரும் ஆரோக்யமாக இருப்பதாக சொல்லி அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட சொல்கிறார்.பிறகு சுவாதியை கல்லூரியில் நடக்கும் பங்ஷனில் பாட சொல்லி ரேவதி மற்றும் கார்த்திக் என இருவரும் அழைத்து வருகின்றனர். அப்போது ரேவதி நான் படிக்கும் போது இப்படியெல்லாம் எதுவும் நடக்கல என்று தனது கல்லூரி அனுபவத்தை சொல்லியபடி வருகிறாள். பிறகு ரேவதி தண்ணீர் குடிக்க போக அப்போது இரண்டு மாணவர்கள் பேசி கொள்வதை கேட்கிறாள். அதில் ஒருவன் திவ்யா என்ற பெண்ணின் மீது ஆசிட் அடிக்க போவதாக சொல்ல இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.இதை எபப்டியாவது தடுக்க வேண்டும் என்று கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறாள். கார்த்தி சுவாதி மூலமாக அந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்து கடைசி நொடியில் காப்பாற்றி அந்த மாணவனை அடித்து துவைத்து அறிவுரை வழங்குகிறான். சண்டையில் கார்த்தியின் சட்டை கிழிந்து கிடப்பதை பார்த்து ரேவதி வருத்தமடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.உண்மையை உடைத்த துளசி.. லட்சுமியின் கோரிக்கையில் குற்ற உணச்சியில் தவிக்கும் வெற்றி – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம், சீரியலின் நேற்றைய எபிசோடில் லட்சுமி துளசி கழுத்தில் தாலி இருப்பதை பார்த்து அதிர்ச்சியான நிலையில் இன்று, அடுத்த நாள் காலையில் எல்லாரும் சாப்பிட உட்கார துளசி பரிமாற அப்போது கழுத்தில் இருந்த தாலி வெளியே வந்து விழ லட்சுமி இதை கவனிக்கிறாள். உடனடியாக துளசியை கிச்சனுக்கு அழைத்து சென்று ஷாலை போட்டு தாலியை மறைக்கிறாள். யாராவது பார்த்துட போறாங்க என்று கோபமாக சொல்லி விட்டு வர துளசி அம்மாவிற்கு எப்படி தெரியும் என அதிர்ச்சி அடைகிறாள்.இதையடுத்து இன்னொரு பக்கம் வெற்றியின் வீட்டில் முனுசாமி வீட்டிற்கு விருந்து சென்று வர சொல்லி அனுப்பி வைக்க வெற்றி பெரியதாக ஈடுபாடு இல்லாமல் முனுசாமி வீட்டிற்கு வருகிறான். திவ்யா அவனுக்காக விதவிதமாக சமைத்து காத்துக் கொண்டிருக்கிறாள். இங்கே துளசி அம்மாவை சந்தித்து கோவிலில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி இந்த தாலி எப்படி வந்ததுனே எனக்கு தெரியாது எனவும் வெற்றியிடம் உதவி கேட்டு இருக்கும் விஷயத்தையும் சொல்ல லட்சுமி அதிர்ச்சி அடைகிறாள்.பிறகு லட்சுமி வெற்றிக்கு போன் செய்து உடனடியா உன்னை பார்க்கணும் என்று சொல்ல வெற்றி முனுசாமி வீட்டில் இருந்து சாப்பிடாமல் கிளம்பி வந்து விட திவ்யா அப்செட் ஆகிறாள். பிறகு லக்ஷ்மியும் வெற்றியிடம் துளசி கழுத்தில் தாலி கட்டியது யார் என்பதை நீ தான் கண்டுபிடித்து தரணும் என்று உதவி கேட்க வெற்றி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். வெற்றி வீட்டிற்கு வர அவனது அம்மா முனுசாமி வீட்டில் சாப்பிடாமல் வந்ததால் அவனிடம் கோபப்பட்டு பேசுகிறாள். வெற்றிக்கு லட்சுமி உதவி கேட்ட விஷயங்கள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பாக்கியத்துக்கு கேன்சர்.. பரணி, சண்முகத்துக்கு தெரிய வந்த உண்மை, காத்திருந்த அதிர்ச்சி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகத்தின் கோபத்தால் இசக்கி சாப்பிடாமல் இருந்த நிலையில் இன்று, பரணி இசக்கி பார்க்க வர அவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்து அவளுக்கு ஆறுதல் சொல்லி சாப்பிட வைக்கிறாள். இதையடுத்து இசக்கி சாப்பிட முடியாமல் மயங்கி விழ பரணி அவளுக்கு குளுக்கோஸ் ஏற்றுகிறாள்.அப்போது மயக்கத்தில் இசக்கி என் மேல எதுக்கு நான் கோவமா இருக்க? நான் எதுக்காக உன்னை மீறி இங்க வந்தேன் தெரியுமா? அத்தைக்காகத்தான். அத்தைக்கு மூளையில் ஏதோ கட்டி இருக்கான் என்று புலம்ப இதைக்கேட்ட பரணி அதிர்ச்சி அடைகிறாள். பீரோவில் இருந்து பாக்கியத்தின் ரிப்போர்ட்டை எடுத்து பார்த்து அம்மாவுக்கு கேன்சர் என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறாள்.இந்த ரிபோட்டுடன் வீட்டுக்கு வந்த பரணி சண்முகத்தை பார்த்து இசக்கி எதுக்காக அந்த வீட்டுக்கு போனால் தெரியுமா? நீ எனக்கு அத்தை இல்ல அம்மா மாதிரியே எதிரும் வாய் வார்த்தையா தான் சொல்லி இருக்கேன் ஆனா அதை உண்மையான புள்ளையா நடந்து இருக்கா. அம்மாவுக்கு கேன்சர் அதனால் தான் இசக்கி அங்க போய் இருக்கா என்று ரிப்போர்ட்டை தூக்கி முகத்தில் வீச சண்முகம் அதிர்ச்சி அடைகிறான்.என்ன சொல்ற என்று சண்முகம் கலங்க பரணி இந்த விஷயம் அம்மாவுக்கு கூட தெரியாது. அண்ணனும் இசக்கியும் அம்மாவுக்கு விஷயத்தை சொல்லாமல் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்காங்க என்று சொல்கிறாள். சண்முகம் உடனே அத்தையை பார்க்கணும் என்று கிளம்பி சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிக்க சௌந்தரபாண்டி கதவை திறக்க பரணி அவருக்கு விஷயம் தெரியாது என கண்ணை காட்டுகிறாள்.பாக்கியம் சண்முகத்தின் குரலைக் கேட்டு இந்த நேரத்துல என்னடா என்று கேட்க சண்முகம் என்ன மன்னிச்சிடு என மன்னிப்பு கேட்க பாக்கியம் ஒன்றும் புரியாமல் நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.