இலங்கை
ஆசிரியையின் தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவர் வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியையின் தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவர் வைத்தியசாலையில் அனுமதி
கல்முனை அல்-அஸ்ஹர் கனிஸ்ட பாடசாலையில் தரம்-05 ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் கண்மூடித்தனமான தக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீர விசாரிக்காமல் செய்யாத தவறு ஒன்றிக்காக இந்த மாணவரை குறித்த ஆசிரியை வகுப்பறையில் வைத்து தாக்கியதாகவும், தற்போது தாக்குதலுக்குள்ளான மாணவர் பாடசாலையில் முதலாம் தவணை பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து பாடசாலை ஆசிரியைக்கு எதிராக கல்முனை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் உடனடியாக விரைந்து பாடசாலை நிருவாகம் உரிய நீதியை எனது குடும்பத்திற்கும் என் பிள்ளைக்கும் பெற்றுதருமாறு பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
தனது பிள்ளை இந்த தாக்குதலின் பின் மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இப்படியான செயல்கள் நாளை எந்த பாடசாலை மாணவ,மாணவிகளுக்கும் ஏற்படாமல் பாதுகாக்குமாறும் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை முஹம்மட் இர்சாட் ஊடகங்களுக்கு கருத்து தெரிவுத்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை