நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 21/05/2025 | Edited on 21/05/2025

வேதாஜி பாண்டியன் இயக்கத்தில் ஆர். பாண்டியன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரவுப்பறவை’. இப்படம் நாடற்றவர்களாய் வாழும் தமிழர்களின் இந்திய குடியுரிமை பற்றி பேசுவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி, எம்.எல்.ஏ. வேல்முருகன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய ஜாகுவார் தங்கம் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து பேசுகையில், “எனக்கு போன மாசம் 25ஆம் தேதி டி.நகர் போலிஸ்காரங்க கூப்பிட்டாங்க. உங்க உயிருக்கு ஆபத்துன்னு ஒரு லெட்டர் காமிச்சாங்க. அதோடு வெளியே வரக்கூடாதுன்னும் சொன்னாங்க. நான் பயப்படல. என் வண்டில ஆயுதம் வச்சிருக்கேன். எவன் வந்தாலும் வெட்டுவேன்னு சொன்னேன். ஏன்னா நான் தூத்துக்குடி தமிழன். 

Advertisement

என்னை யார் யார் கொலை செய்ய முயற்சி பன்றாங்களோ அவங்க அத்தனை பேர் பெயரையும் டைரியில் எழுதி வச்சிருக்கேன். ஒரு வேளை என்னை ஆம்ஸ்ட்ராங் மாதிரி போட்டுட்டா… யாரும் என்னை தொட முடியாது, தொட்டால் நிறைய விலை கொடுக்கனும். ஒரு வேளை எனக்கு எதாவது நடந்தால் திருமாவளவன் தான் பார்க்கனும். அவர்தான் எனக்கு தெய்வம். அவரை எனக்கு 40 வருஷமா தெரியும். அவர் என்மீது நிறைய அன்பு வச்சிருக்கார்” என்றார்.