இலங்கை
இலங்கை மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு பற்றாக்குறை

இலங்கை மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு பற்றாக்குறை
நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமில் விஜேசிங்க கூறுகையில்,
நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகக் கூறினார்.
மருத்துவமனைகள் அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் பற்றாக்குறை குறித்து முறையிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், மருத்துவ விநியோகத் துறையில் கிட்டத்தட்ட 180 மருந்துகள் கையிருப்பில் இல்லை. மேலும், மருத்துவமனை அமைப்பில் கிட்டத்தட்ட 50 மருந்துகள் கையிருப்பில் இல்லை.
நிலைமை மோசமடைந்து வருகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றில் சிக்கல் இருப்பதாக எங்களுக்குக் கிடைக்கும் தகவல் உள்ளது.
மேலும், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படும் சில உபகரணங்கள் போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில், மருத்துவமனை அமைப்பிலும், பிராந்திய ரீதியாகவும் சிக்கல்களைக் காண்கிறோம்.
மருந்துகளின் பற்றாக்குறையில் சில மருத்துவமனை அமைப்பிலேயே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.