இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு சந்தேக நபரான சாரதியை, இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இரு சந்தேக நபர்களும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.