இலங்கை
கொள்ளையர்களால் பாதிக்கப்படும் மட்டக்களப்பு மீனவர்கள்

கொள்ளையர்களால் பாதிக்கப்படும் மட்டக்களப்பு மீனவர்கள்
மட்டக்களப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட குழு இந்தப் பகுதி மீனவர்களின் மீன்களைக் கொள்ளையடித்துச் செல்வதால் அவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கல்முனை மற்றும் மட்டக்களப்பில் உள்ள மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடை செய்யப்பட்ட உயர் சக்திமிக்க இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகளில் வரும் இந்தக் குழு, மீனவர்களின் மீன்களைப் பறிமுதல் செய்வதுடன், வலைகளையும் சேதப்படுத்துவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தாலும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக சாய்ந்தமருது மீனவர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாகக் கடலுக்குச் செல்வதை நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.