பொழுதுபோக்கு
டைட்டில் இல்லாமல் படமா? கமல்ஹாசன் படத்திற்கு தலைப்பு கொடுத்த கண்ணதாசன்: படம் ஹிட் ஆனதா?

டைட்டில் இல்லாமல் படமா? கமல்ஹாசன் படத்திற்கு தலைப்பு கொடுத்த கண்ணதாசன்: படம் ஹிட் ஆனதா?
தங்கள் படத்தின் பாடல்களுக்காக, கவிஞர் கண்ணதாசனை சந்தித்த இளையராஜாவும் கமல்ஹாசனும் படத்திற்கு டைட்டில் வைக்கவில்லை என்று சொல்ல, அதற்கு கண்ணதாசனே ஒரு டைட்டிலை கொடுத்துள்ளார். அது என்ன படம் என்பதை பார்ப்போம்.தமிழ் சினிமாவில் கவிஞர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் கண்ணதாசன். தான் எழுதிய அனைத்து பாடல்களுமே படத்தின் சூழ்நிலை மட்டும்லலாமல் தான் சொந்த வாழ்வில் சந்தித்த அனுபவங்களையும் இணைத்து எழுதியிருப்பார். இதனால் காரணமாக அவரது பாடல்கள் காலத்தை கடந்தும் இன்றுவரை நிலைத்திருக்கிறது.படத்தின் கதையில் பாடல் வரும் சூழ்நிலையை சொல்லிவிட்டால், உடனடியாக பாலை கொடுத்துவிடும் கண்ணதாசன், கமல்ஹாசனுக்கு முதல்முறையாக எழுதிய பாடலை கமல்ஹாசன் வேண்டாம் என்று கூறியுள்ளார். அதே சமயம் அந்த பாடலை எழுதியதற்காக நன்றியும் தெரிவித்துள்ளார். 1981-ம் ஆணடு சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படம் ராஜபார்வை.கமல்ஹாசன் கதை எழுதி தயாரித்து நடித்த இந்த படம் அவரின் 100-வது படமாக அமைந்தது. படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இந்த படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அழகே அழகு என்ற ஒரு பாடலை மட்டும் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்திற்காக, கமல்ஹாசனும், இளையராஜாவும், பாடல்கள் எழுத கவியரசர் கண்ணதாசனை சந்தித்தபோது, அவர் படத்திற்கான கதையை கேட்டுவிட்டு பாடல் எழுத ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம், படத்தின் தலைப்பு என்ன என்று கேட்கும்போது, அதுதான் என்ன தலைப்பு வைப்பது என்று தெரியவில்லை, என்று கமல்ஹாசன் இளையராஜா இருவரும் கூறியுள்ளனர்.இதை கேட்ட கண்ணதாசன், படத்தில் நாயகன் குருடன், அவனை ஒரு பெண் காதலிக்கிறாள். அதனால் படத்திற்கு ராஜபார்வை என்று டைட்டில் வை என்று கூறியுள்ளார். இதற்கு விளக்கம் கேட்க, கண் தெரிந்தவன் நேராகத்தான் நடப்பான். ஆனால் பார்வை இல்லாதவன், தலையே மேலே தூக்கிக்கொண்டு ராஜாவாக நடப்பான என்று கூறியுள்ளார். அதன்பிறகே இந்த படத்திற்கு ராஜபார்வை என்று டைட்டில் வைக்கப்பட்டதாக இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.அதேபோல், இந்த படத்திற்காக, ராஜபார்வை என்று தொடங்கும் ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். இந்த பாடலை பார்த்த கமல்ஹாசன் இந்த பாடல் பிடிக்கவில்லை வேறு பாடல் எழுதி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.அதே சமயம் இந்த பாடலில் ராஜபார்வை என்ற வார்த்தையை கொடுத்து எங்கள் படத்திற்கு டைட்டில் கிடைக்க செய்துவிட்டீர்கள் அதற்காக நன்றி என்றும் கமல்ஹாசன் கூறியதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. எப்படி இருந்தாலும், கமல்ஹாசனின் 100-வது படமாக வெளியாக ராஜபார்வை திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.