இலங்கை
நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ; இந்தியாவில் இருந்து இறக்குமதி

நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ; இந்தியாவில் இருந்து இறக்குமதி
நாட்டில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றிரவு (21) நாட்டிற்கு 3,050 மெட்ரிக் தொன் உப்பை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் மாதாந்திர உப்புத் தேவை 15,000 மெட்ரிக் தொன் என்பதுடன், ஆண்டுத் தேவை 180,000 மெட்ரிக் தொன் ஆகவும் உள்ளது.