இலங்கை
நெல்லியடியில் பாரிய தீ விபத்து – விரைந்து செயற்பட்டதால் கட்டுப்பாட்டுக்குள்!

நெல்லியடியில் பாரிய தீ விபத்து – விரைந்து செயற்பட்டதால் கட்டுப்பாட்டுக்குள்!
நெல்லியடி நகர்ப்பகுதியில் இன்று புதன்கிழமை(21) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கரவெட்டி பிரதேச சபையின் செயலாளரினால் உடனடியாக யாழ்.மாநகர சபை தீ அணைப்பு பிரிவுக்கு 4:42 மணிக்கு தகவல் வழங்கி ஸ்தலத்திற்கு தீயணைப்பு படையும் வருகை தந்திருந்த போதும் பிரதேச சபையின் ஊழியர்களின் முயற்சியும் பொதுமக்களின் பங்களிப்புடனும் தீ கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டது.
அனைவரது ஒத்துழைப்புடன் பெரியதொரு இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தீ அணைப்பின் போது உடனடியாக செயற்பட்ட பிரதேசசபையின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கரவெட்டி பிரதேசசபையின் செயலாளர் கணேசன் ஹம்சனாதன் இதன்போது தெரிவித்துள்ளார்.