Connect with us

இலங்கை

புலிகளால் பிடிக்கப்பட்ட மக்களை பத்திரமாக மீட்டது படையினராம்!

Published

on

Loading

புலிகளால் பிடிக்கப்பட்ட மக்களை பத்திரமாக மீட்டது படையினராம்!

இனவழிப்பும் நடக்கவில்லை, போர்க்குற்றங்களும் நிகழவில்லை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு 

விடுதலைப்புலிகளால் பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை, படையினரே பத்திரமாக மீட்டனர். எந்தவொரு போர்க்குற்றத்திலும் படையினர் ஈடுபடவில்லை – இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

Advertisement

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில் இனப்படுகொலைகள் – இடம்பெற்றன என்று கூறப்படும் குற்றச் சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கின்றோம். கனடா மட்டுமல்ல, உலகில் எந்த நாடாக இருந்தாலும், அவற்றால் முன்வைக்கப்படும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிப்போம். 

ஏனெனில், இலங்கையில் இனப்படுகொலை நடந்தது எனக் கூறப்படுவதை ஏற்கவே முடியாது. போரின் போது கூட சிவில் மக்களைப் பாதுகாத்தப்படியே போர் முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளால் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த மக்களைக்கூட படையினரே மீட்டனர். இதுவே எமது உறுதியான நிலைப்பாடாகும் – என்றார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன