Connect with us

சினிமா

யார் இந்த கெனிஷா ஃபிரான்சிஸ்!! யாருக்கும் தெரியாத தகவல்கள்..

Published

on

Loading

யார் இந்த கெனிஷா ஃபிரான்சிஸ்!! யாருக்கும் தெரியாத தகவல்கள்..

தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது ரவி மோகன் – ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம் பற்றித்தான்.கடந்த ஆண்டு மனைவியை விவாகரத்து பெறவுள்ளதாக அறிக்கை வெளியிட்ட ரவி மோகன், அடுத்தடுத்த அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அவர் ஒரு பக்கம் இருக்க ஆர்த்தி ரவியும் தன் பக்கத்திற்கு அறிக்கையை வெளியிட்டு வந்தார்.இவர்கள் இந்த பிரச்சனை முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில் யார் இந்த கெனிஷா ஃபிரான்சிஸ் முதல் அவர் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகை, மேலைநாட்டு நடனக் கலைஞர், மனக்குறைகளை குணப்படுத்துபவர் என பல முகங்கள் கெனிஷாவிற்கு உண்டு. 8 வகையான லத்தீன் நடனங்களை கற்றுள்ள கெனிஷா, கோவாவின் பார்ட்டி கிளப்புகளில் பிரபலமானவர். அவரின் பெற்றோர் காலமாகிவிட்டதால் தனிக்கட்டு ராணியாக இருந்து வந்தார். கெனிஷா கென்யாவில் பிறந்து வளர்ந்தவர். அப்பா தமிழ் வம்சாவளி, அம்மா கென்யாவை சேர்ந்தவர்.பெங்களூருவில் பல ஆண்டுகளாக வசித்து வந்த கெனிஷா, தி ஸ்டேஜ் என்ற ரியாலிட்டி ஷோவில் இறுதிப்போட்டியாளர் என்ற கட்டம் வரை சென்றவர். அதன்பின் பாடகியாகி, ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மொழிகளில் இசையை கற்று விரிவுப்படுத்தினார். நடனக்கலைஞராகவும், உரிமம் பெற்ற உளவியலாளராகவும் பணியாற்றி வரும் கெனிஷா, இசையின் மீதான ஆர்வம், மனவள சிகிச்சையாளராக மாற்றியது.தென்னிந்திய பிரபலங்கள், பாடகர்களுடன் தொழில் ரீதியான தொடர்பில் இருந்து வருபவர். அவரது இன்ஸ்கிராம் பக்கத்தை ஒரு லட்சத்திற்கு மேலானோர் ஃபாலோ செய்கிறார்கள். தற்போது ரவி மோகனுடன் தொடர்பில் இருந்து பேசுபொருளாக மாறியிருக்கிறார்.ரவியும் கெனிஷாவும் இதயம் சொல்வதோ என்ற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்தித்து பின் நட்பாகினர். அதன்பின் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கெனிஷாவின் மனநள ஆலோசனையை ரவி மோகன் பெற்றார். அப்போது ஆரம்பித்த தொடர்பு தற்போது ரவி மோகன், மனைவி ஆர்த்தியை பிரியும் அளவிற்கு சென்றுள்ளது.கோவாவில் சில மாதங்களுக்கு முன் கெனிஷாவும் ரவியும் வேகமாக காரை ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விசயம் ஆர்த்திக்கு தெரியவந்ததால், ரவி மோகனை கண்டிக்க ஆரம்பித்ததில் இருந்து தான் பிரச்சனையே ஆரம்பித்ததாம்.தற்போது ஆர்த்தி – ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளனர். விவாகரத்து வேண்டும் என்று ரவி மோகன் சொல்ல, எனக்கு மாசம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்று ஆர்த்தி ரவி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன