இலங்கை
வவுனியாவில் கோலாகலமாக இடம்பெறவுள்ள பருவ கால கிரிக்கெட் தொடர்!

வவுனியாவில் கோலாகலமாக இடம்பெறவுள்ள பருவ கால கிரிக்கெட் தொடர்!
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளியங்குளம் முத்துமாரி நகரில் இளைஞர்களின் அயராத முயற்சி காரணமாக, ஆரம்பிக்கப்பட்ட வாணி விளையாட்டுக் கழகமானது முதன் முறையாக மிகப் பிரமாண்டமான முறையில் பருவ கால கிரிக்கெட் தொடர் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது.
மேலும் தெரிய வருகையில்,
குறித்த தொடரானது, புளியங்குளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து கழகங்களை உள்ளடக்கி எதிர்வரும் ஜுன் மாதம் 6, 7 மற்றும் 8ம் திகதிளில் வாணி விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை